கேரளா: காசர்கோடு ஹோஸ்துர்க் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளி பி.ஏ.சலீம் (40)-க்கு சாகும் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024 மே 15ஆம் தேதி சிறுமியின் தாத்தா அதிகாலையில் பசும்பால் கறக்கச் சென்றிருந்தார். அப்போது சலீம் வீட்டிற்குள் நுழைந்து, சிறுமியின் வாயைப்பொத்தி வயலுக்கு தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கேரளா போலீசார் சலீமை கைது செய்தனர். இந்த வழக்கு கேரளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் குற்றவாளி பி.ஏ.சலீமு-க்கு சாகும் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.