இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்த மோதலுக்கு இடைவேலையாக அமைந்தது. இந்த ஒப்பந்தம் நேற்று மாலை 5 மணி முதல் அமலில் வந்ததாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.மோதலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இரு நாடுகளும் சமாதானத்திற்கு முன்வந்துள்ளன. இருப்பினும், நேற்றிரவு பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் சத்தம் கேட்டதாகவும், ட்ரோன்கள் வானில் பறந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, போர் நிறுத்தம் உண்மையானதா என்ற கேள்வி எழுப்பினார். இந்திய பாதுகாப்பு படையினர் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.மத்திய அரசு, பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கியது. அதன்படி, ராணுவம் சில பகுதிகளில் பதிலடி வழங்கியதாக தகவல்கள் வந்தன.
போர்நிறுத்தத்துடன் காஷ்மீர் பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல திரும்பியதாகவும் கூறப்படுகிறது. பூஞ்ச், ஜம்மு, ரஜோரி, அக்னூரில் அமைதி நிலவுகிறது. தற்போது ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகள் தாக்குதல் என்கின்ற எந்த செயலும் இல்லை.இந்த நிலையில், இன்று மே 11 ஆம் தேதி ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து, போர்நிறுத்தத்திற்கு பின் நிலவரம் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
இதற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது மட்டும் இல்லாமல், எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய தகவல்கள் பகிரப்படும் வாய்ப்பு உள்ளது. இந்தியா எப்போதும் அமைதிக்காக செயல்படும் நாடாக இருந்தாலும், தாக்குதல் வந்தால் பதிலடி கொடுப்பதில் தயங்காது என்பது இந்நிகழ்வின் முக்கியப் பாடமாகும்.இப்போதைக்கு எல்லையில் அமைதி நிலவி வருவதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். பாதுகாப்பு படைகள் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன.இரு நாடுகளும் உரையாடலுக்கு வாய்ப்பு வழங்கி, நிலையான அமைதிக்கான முயற்சியை தொடர வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.