கேரளா: இடைத் தேர்தல்… வேட்பாளர்கள் அறிவிப்பு மும்முரம்… கேரள மாநிலத்தை பொறுத்தவரை வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. வழக்கமாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே அந்த 3 தொகுதிகளும் காலியாக இருக்கின்றன. இதனால் அந்த தொகுதிகளுக்கு விரைவிலேயே இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த நேரத்தில் அறிவிக்கப்பட்டாலும் இடைத்தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மேலும் வேட்பாளர்கள் தேர்விலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
வயநாடு தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.