புதுடெல்லி: கேரளாவில் நிலச்சரிவு மற்றும் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக முன்கூட்டியே எச்சரித்துள்ளோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் அவர் கூறியதாவது: வயநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நிலச்சரிவு குறித்து கேரளாவை முன்கூட்டியே எச்சரித்தோம். 7 நாட்களுக்கு முன், ஜூலை 23ல், மத்திய அரசு தகவல் கொடுத்தது. 24,25ல் மீண்டும் எச்சரித்தோம். 27ம் தேதி, 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும், நிலச்சரிவு ஏற்பட்டு, மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என, எச்சரிக்கை விடப்பட்டது.
அவர்கள் முன்கூட்டிய எச்சரிக்கை முறையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். 2014-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பிற்காக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.