பெங்களூரு: கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கர்நாடக அரசு ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பொது சுகாதாரத்தின் அடிப்படையில் அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலக வளாகங்களில் புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, அலுவலகங்களில் போதைப்பொருள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு பலகையை அலுவலகங்களில் உரிய இடங்களில் வைக்க வேண்டும். இதை மீறினால், ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.