கர்நாடகா: கர்நாடகாவில் பீர் விலை திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் மதுபானங்களின் மீதான கலால் வரி வரும் பட்ஜெட்டில் உயர்த்தப்பட உள்ள நிலையில் மதுபானங்கள் மற்றும் பீர் விலை உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே கலால் வரியை உயர்த்தி பீர் விலையும் அதிகரித்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனவரி 20ம் தேதி முதல் கலால் வரி உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது என்றும் புதிய விலையின் படி 10 ரூபாய் வரை முதல் 40 ரூபாய் வரை பீர் விலை உயரும் என்றும் சில குறிப்பிட்ட பிராண்டுகளின் பீர் விலை மட்டுமே உயர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக மாநில கலால்துறை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து விலைகளும் உயர்ந்துள்ள நிலையில் தற்போது பீர் விலையும் உயர்ந்துள்ளதை அடுத்து மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது