இளைஞர்கள் ஆரோக்கியமாக இருக்கவும், தூய்மையான சூழலை உருவாக்கவும் சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் ஃபிட் இந்தியா இயக்கத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தொடங்கி வைத்தார்.
இதில் 500-க்கும் மேற்பட்ட சைக்கிள் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சைக்கிள் சவாரி செய்தனர். இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்து அவர் பேசுகையில், ”ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், குறுகிய தூரம் பயணிக்க, சைக்கிளை பயன்படுத்த வேண்டும். இது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலையும் மேம்படுத்துவதோடு மாசுபாட்டின் சிக்கலையும் தீர்க்கும்.