திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவின் இறுதியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. தீர்த்தவாரி முடிந்ததும் பக்தர்கள் கோவில் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் அக்டோபர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆந்திர அரசு சார்பில் சுவாமிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை வழங்கினார்.
அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர், 4 மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியாக, 8ம் தேதி இரவு கருட சேவை நடந்தது.
11ம் தேதி காலை மகா ரதம் என்ற தேர் நடந்தது. அன்று இரவு குதிரை வாகனத்தில் சுவாமி உற்சவம் நடைபெற்றது. இன்று காலை புஷ்கரணியில் தீர்த்தவாரி நடக்கிறது. அன்று கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.