புதுடெல்லி: இந்திய தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான நிறுவனம் இலங்கையின் மன்னார் மற்றும் புனேரி மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, மன்னார், புனேரி மாவட்டங்களில் அதானி குழுமம் மேற்கொள்ளவிருந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் 6% சரிந்தன.
இந்நிலையில், மன்னார் மற்றும் புனேரியில் அதானி குழுமம் மேற்கொள்ள உள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அரசு அதிகாரி நளிந்த ஜயதிஸ்ச, “மன்னார் மற்றும் புனேரியில் அதானியின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. “மாறாக, அதை மறுபரிசீலனை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அதன் பணியை துவங்கியுள்ளது. ஆய்வு முடிந்த பின் முடிவு எடுக்கப்படும்,” என்றார்.