புதுடெல்லி: நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்திற்கு ஏப்ரல் 7, 2021 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜவுளி, தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற சில துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதே இதன் நோக்கம்.
அதன்படி, எல்இடி விளக்குகள் உள்ளிட்ட சாதனங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஏ.சி மற்றும் ரூ.6,238 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2021-22 முதல் 2028-29 வரை 7 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும்.
இதற்கான விண்ணப்ப பதிவு இதுவரை 2 முறை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை, 66 நிறுவனங்கள் பிஎல்ஐ திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.6,962 கோடி முதலீடு செய்ய உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 3வது முறையாக விண்ணப்ப பதிவு வரும் 15ம் தேதி துவங்கும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு 90 நாட்களுக்குள் அதாவது அக்டோபர் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நிறுவனங்கள் மட்டுமின்றி ஏற்கனவே இத்திட்டத்தில் பயன்பெறும் (கூடுதல் முதலீடு செய்ய விரும்பும்) நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.