நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், நீட்-யுஜி தேர்வில் வினாத்தாள்கள் எதுவும் கசிவு இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
லட்சக்கணக்கான இளைஞர்களை நம்ப வைக்க இந்த அப்பட்டமான பொய் கூறப்படுவதாகவும், அரசின் இந்த முயற்சியால் அவர்களின் எதிர்காலம் பாழாகி வருவதாகவும் கூறினார். “ஒரு சில இடங்களில் மட்டுமே முறைகேடுகள், மோசடிகள் நடந்துள்ளன” என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறுவது தவறானது என்று கூறிய மல்லிகார்ஜுன கார்கே, கல்வி மாஃபியாவை ஊக்குவித்து ஒட்டுமொத்த கல்வித்துறையையும் கையகப்படுத்திய பாஜக-ஆர்எஸ்எஸ் என்று விமர்சித்தார்.
நீட்-யுஜியை மீண்டும் நடத்தி, வெளிப்படைத் தேர்வை நடத்த வேண்டும் என்றும், தேர்வில் வினாத்தாள்கள் கசிந்து நமது கல்வி முறையை அழிக்கும் நோக்கத்தில் மோடி அரசு உள்ளது. வினாத்தாள் கசிவு முறைகேடுகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் முழுமையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோடி அரசு தனது தவறுகளில் இருந்து தப்ப முடியாது என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்:
மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த நீட் மருத்துவ சேர்க்கை செயல்முறை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது