ஈரோடு: ஈரோட்டில் ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆவின் பொருளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏற்கனவே ஆவின் நெய்யை திருப்பதிக்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும். பால் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை. அதே நேரத்தில், போலி சந்தையில் பால் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பால் விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
நமது தயாரிப்புகளை பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும். ஆவின், காதி போன்ற அரசு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமானதாகவும், குறைந்த விலையுடனும் உள்ளன. எனவே, பொதுமக்கள் அவற்றை அதிகம் வாங்கி பயன்படுத்தினால், நிறுவனங்கள் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.