புதுடெல்லி: சமையல் எண்ணெய் விலை உயரலாம் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உள்ளூர் விவசாயிகளை ஊக்கப்படுத்த, தாவர எண்ணெய் மீதான இறக்குமதி வரியை உயர்த்த, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பரில் இறக்குமதி வரி உயர்வு காரணமாக ₹110க்கு விற்ற ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், படிப்படியாக விலை உயர்ந்து தற்போது, ₹150 ஆக உள்ளது.
அதேபோல, பாமாயில், ₹95லிருந்து ₹140 ஆன நிலையில், இது மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் தரப்பில் கூறுகையில் இவ்வாறு விளைவு பெறுவது எங்களை பெரும் பொருளாதார பிரச்சினையில் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்..