பெங்களூரு: கர்நாடகாவில் பெஸ்காம் உட்பட ஐந்து மின் விநியோக நிறுவனங்கள் மூலம் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஸ்மார்ட் மீட்டர்கள் டெண்டர் மூலம் வாங்கப்பட்டது. இதனிடையே, விதிமுறைகளை மீறி வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்துள்ளதாகவும், ரூ.15,568 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டிய பாரதிய ஜனதா கட்சி டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஸ்மார்ட் மீட்டர்களை கட்டாயமாக்க சட்டத்தில் இடமில்லை என்ற விதி உள்ளது. இதை மீறி 5 மின்பகிர்மான நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.