திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. ஆடி மாதத்தின் முதல் நாளில் அதிகாலை 5 மணிக்கு பூஜைகள் தொடங்கின.
கணபதி ஹோமம், உஷ பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன், உதயஸ்தமய பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. நேற்று நெய்யாபிஷேகமும் தொடங்கியது.

கனமழையையும் பொருட்படுத்தாமல் ஆடி மாதத்தின் முதல் நாளில் சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோயில் 21-ம் தேதி வரை திறந்திருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.