கொல்கத்தா : பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் மரணதண்டனை கேட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது சியால்டா நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேற்குவங்க அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதில் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.