புதுடில்லி: குரங்கு அம்மை நோய் பரவலைத் தடுக்க விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் குரங்கம்மை பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க டெல்லியில் மூன்று மருத்துவமனைகள் முக்கிய நோய்த் தடுப்பு மையங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாநில அரசுகளும் மாவட்ட வாரியாக இத்தகயை சிறப்பு சிகிச்சைக்கான மருத்துவமனைகளை அடையாளம் காணும்படியும் சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட அண்டைநாடுகளிலிருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும்படி சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.