பெங்களூர் : ரூ.50 கோடிக்கு நாய் வாங்கியதாக வாலிபர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால்வாயைப் அமலாக்கத்துறை ரெய்டு நடத்த உண்மை தெரிய வந்து தலையில் அடித்துக் கொண்டு சென்றுள்ளனர் அதிகாரிகள்.
பெங்களூருவைச் சேர்ந்த சதீஷ் என்ற நபர் ரூ.50 கோடிக்கு நாய் வாங்கியதாக சோஷியல் மீடியாவில் பதிவிட அது ED ரெய்டு வரைக்கும் சென்றுள்ளது.
‘கடாபோம்ப் ஒகாமி’ எனும் நாய் + ஓநாய் சேர்ந்த கலப்பின நாயை வாங்கியதாக அவர் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டார். இதையடுத்து அவரது வீட்டிற்கு ரெய்டுக்குச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் சதீஷ் சொன்னது பொய் எனவும், பக்கத்து வீட்டுக்காரரின் நாயை அவர் போட்டோ எடுத்து பதிவிட்டதாகவும் தெரியவந்து அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் அதிகாரிகள்.