கொல்கத்தா : கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ற ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் மின்கம்பத்தில் மோதியதால் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில், மின்கம்பத்தில் மோதி ரயில் தடம் புரண்டது.
நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், காயமடைந்தோர் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.