புதுடெல்லி: இந்திய சந்தையில் விற்கப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
டாக்ஸி லிங்க் என்பது டெல்லியில் உள்ள ஒரு அமைப்பு. இந்த அமைப்பின் சார்பில், இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் சர்க்கரை, உப்பு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: இந்திய சந்தையில் விற்கப்படும் அயோடின் கலந்த உப்பு, கல் உப்பு, சர்க்கரை போன்றவற்றில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. இவற்றின் அளவு 0.1 மிமீ முதல் 5 மிமீ வரை இருக்கும்.
பிளாஸ்டிக் துகள்கள் உணவு, நீர் மற்றும் காற்று மூலம் மனித உடலுக்குள் நுழைகின்றன. இவை மனிதர்களின் நுரையீரல், இதயம் மற்றும் இரத்த நாளங்களில் குவிந்துவிடும். பிளாஸ்டிக் துகள்களால் நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, எடை அதிகரிப்பு, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அவ்வாறு கூறுகிறது.
இது குறித்து ஆய்வை நடத்திய டாக்சிஸ் லிங்க் நிறுவனர் ரவி அகர்வால் கூறுகையில், நுண் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவியல் ஆய்வு நடத்தி விரிவான கையேடு வெளியிட்டுள்ளோம்.