திருமலை: நேற்று முன்தினம் இரவு திருமலை ஏழுமலையான் கோயிலில் இருந்து திருப்பதி செல்லும் 1-வது மலைப்பாதையின் 7-வது மைல் அருகே உள்ள மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன.
இந்த யானைகள் அங்குள்ள மரக்கிளைகளை உடைத்து தின்று கொண்டிருந்தன. இதைக் கண்டு, அந்த வழியாகச் சென்ற பக்தர்கள் பயந்து போனார்கள். இது குறித்து கோயில் வனத்துறைக்கு தகவல் அளித்தது.

அங்கு விரைந்த வனத்துறையினர், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வாகனங்களின் சைரன்களையும் அவர்கள் ஒலிக்கச் செய்தனர். சத்தம் கேட்டு, யானைகள் சிறிது நேரத்தில் காட்டுக்குள் ஓடிவிட்டன.
இதைத் தொடர்ந்து, பக்தர்கள் தங்கள் வாகனங்களில் தனியாக பயணிப்பதைத் தவிர்க்குமாறு வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.