பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தனது ஆழ்ந்த வேதனையை தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய பிறகு அவர் தெரிவித்ததாவது, “இந்த துயரமான நேரத்தில், பிரான்ஸ் இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் உறுதியாக நிற்கிறது. தேவையான இடங்களில், பிரான்ஸ் அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும்.”

மேலும், “பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்க்கும் விஷயத்தில் நாம் ஒருமித்ததாக இருந்தோம், என்றும் இருப்போம். பிரான்சின் ஒற்றுமையையும் நட்பையும் இந்தியா நம்பலாம்,” என்று அவர் கூறினார்.
இந்த கருத்துகள், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளால் நடைபெறும் தாக்குதல்களுக்கு எதிரான சர்வதேச ஆதரவை இந்தியா பெறும் வகையில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.