புது டெல்லி: இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பிறகு தன்னார்வ ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதிய பலன் பெற உரிமை பெறுவார்கள். மத்திய ஊழியர் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மத்திய சிவில் சர்வீசஸ் விதிகள், 2025 ஐ 2-ம் தேதி அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவித்துள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் பிற சேவை தொடர்பான விஷயங்களை இந்த விதிகள் நிர்வகிக்கின்றன.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்யும் ஊழியர்கள் 20 ஆண்டுகள் பணிக்குப் பிறகு தன்னார்வ ஓய்வு (VRS) பெற இந்த விதிகள் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன.
மத்திய ஊழியர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முழுப் பலன் 25 ஆண்டுகள் பணிக்குப் பிறகு மட்டுமே வழங்கப்படும். இருப்பினும், 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பணிக்குப் பிறகு தன்னார்வ ஓய்வு பெற்றால், முழு ஓய்வூதியப் பலன் வழங்கப்படும்.”