மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் எங்கள் கோவிலுக்கு சென்று மானை கொன்றதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ. 5 கோடி தருமாறு சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் புதிய மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து மும்பை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூறும்போது, “லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் எனக் கூறி ஒருவரிடமிருந்து எங்களுக்கு ஒரு செய்தி வந்தது.
அதில், சல்மான் கான் தொடர்ந்து வாழ வேண்டுமானால், எங்களின் கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கொல்லப்படுவார். எங்கள் கும்பல் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், செய்தி அனுப்பிய நபர் யார் என்பது கண்டுபிடிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையை அடுத்து நடிகர் சல்மான் கானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 30-ம் தேதி நடிகர் சல்மான் கானுக்கும் இதேபோல் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அப்போது அவரிடம் ரூ.2 கோடி பிணையத்தொகை கேட்கப்பட்டது. இதற்கிடையில், நடிகர் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக்கின் மகனும் என்சிபி எம்எல்ஏவுமான ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நொய்டாவை சேர்ந்த 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் முகமது தைய்யப் அல்லது குர்பான் கான் என அடையாளம் காணப்பட்டார். நொய்டா, செக்டார் 39-ல் அவர் கைது செய்யப்பட்டார்.