கான்பூர்: கூகுள் மேப்ஸ் குழுவினரை திருடர்கள் என நினைத்துத் கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள கிராமத்தில் ஆய்வுக்குச் சென்ற கூகுள் மேப் குழுவினரை அந்தக் கிராம மக்கள் திருடர்கள் என்று தவறாக நினைத்து தாக்கியுள்ளனர்.
பிர்ஹார் கிராமத்தில் உள்ள தெருக்களை 360 டிகிரி சுழலும் கேமரா பொருத்தப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்தி வரைபடமாக்கிக் கொண்டிருந்தபோது இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், கிராம மக்களிடமிருந்து அவர்களை மீட்டு அழைத்துச் சென்றனர்.