புதுடில்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை தெரிவித்துள்ளது. போர் தொடர்பான உண்மை தகவல்களை அறிய தங்களது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலை பின்தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ச
மீபத்தில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் பரபரப்பாகியுள்ளதுடன், அந்நாடு பொய்யான தகவல்களை பரப்ப முயற்சி செய்கிறது. பாகிஸ்தான் ஏற்பட்ட சேதம் மற்றும் தாக்குதல் விவரங்களை மறைத்து, தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் வலம்வரச் செய்கிறது.இந்த பொய்யான செய்திகளை எதிர்த்து மத்திய அரசு ‘FactCheck’ நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.
பாகிஸ்தான் பரப்பும் பொய்களை உடனடியாக தோற்கடித்து உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பொது மக்களின் உணர்வுகளை தவறாக வழிநடத்தும் வாட்ஸ்அப் செய்திகள் பரவாமல் இருக்க சுய கவனம் அவசியம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதன்படி, உண்மையான தகவல்களை பெற பாதுகாப்பு அமைச்சகத்தின் வாட்ஸ்அப் சேனலை பின்பற்றுமாறு https://whatsapp.com/channel/0029VaEHkn3JkK7BfWTsm23W என்ற லிங்க் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது போலியான செய்திகள் அதிகம் பரவுவதால், மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். தேசிய பாதுகாப்பை குறித்த செய்திகளை பகிரும் பொழுது உண்மை தகவலை மட்டுமே பரப்ப வேண்டியது முக்கியம்.பொதுமக்கள் தங்களது சமூக பொறுப்பை உணர்ந்து தவறான தகவல்களுக்கு இடமளிக்காமல், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டுமென அரசு வலியுறுத்தியுள்ளது.