புதுடில்லி: தரையில் இருந்து வான் இலக்கை தாக்க உதவும் ஆயுத பரிசோதனை முழு வெற்றி பெற்றுள்ளது என்று டி.ஆர்.டி.ஓ. அறிவித்துள்ளது.
குறுகிய தூர வான் இலக்கை தாக்க உதவும் ஏவுகணை ஏவும் எந்திரத்தை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்து உள்ளது.
ஒடிசா மாநிலம் பந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்று ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி பரிசோதனை நடைபெற்றது. இந்த மூன்று முறையிலும் ஏவுகணைகள் கச்சிதமாக இலக்கை தாக்கி அழித்தன.
தரையில் இருந்து வானில் பறக்கும் விமானங்கள்,ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் என எந்த இலக்கையும் அழிக்க முடியும் என்பது சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எத்தனை வேகத்தில் பறந்தாலும், எந்த உயரத்திலும் இருந்தாலும்,நகரும் இலக்காக இருந்தாலும் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும் என்பதை நிரூபித்துஉள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.