புதுடெல்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவர் ரன்பீர் சிங் மகேந்திராவின் மகன் அனிருத் சவுத்ரிக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க. பிசிசிஐ முன்னாள் தலைவர் ரன்பீர் மகேந்திராவின் மகனும், நான்கு முறை ஹரியானா முதல்வராக இருந்த பன்சி லாலின் பேரனுமான அனிருத் சவுத்ரி தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அனிருத் சவுத்ரிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: அனிருத் சவுத்ரியை எனது மூத்த சகோதரராகவே கருதுகிறேன்.
அவரது தந்தை ரன்பீர் சிங் மகேந்திரா, பிசிசிஐ தலைவராகவும் பணியாற்றியவர், எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அது அவருக்கு மிக முக்கியமான நாட்களில் ஒன்று. மற்றும் நான் உதவ முடியும் என்று நினைக்கிறேன்.
மக்கள் வாக்களித்து அனிருத் சவுத்ரி வெற்றிபெற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சேவாக்கின் அருகில் அமர்ந்திருந்த அனிருத் சவுத்ரி, ‘தற்போதைய பா.ஜ.க. அரசு, விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க தவறியதால், காங்கிரஸ் வெற்றி பெறும் என்பது உறுதி’ என்றார். இதே தொகுதியில் பாஜக சார்பில் பன்சிலாலின் மற்றொரு மகன் ஸ்ருதி சவுத்ரி போட்டியிடுகிறார்.