புதுச்சேரியில் ஜனவரி 2025 முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கடந்த 2017ல் வெளியிடப்பட்ட அறிவிப்பு கடும் எதிர்ப்பு காரணமாக வாபஸ் பெறப்பட்டதால் இது புதிய முயற்சி.
பின்னர், கிரண் பேடி ஆளுநராக இருந்தபோது, ஹெல்மெட் கட்டாயத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட்டார். ஆனால், அந்த காலகட்டத்தில் ஒரு சில வாகன ஓட்டிகள் மட்டுமே ஹெல்மெட் அணிந்தனர்.
இப்போது, 2025 முதல் மாதத்திலிருந்து, இது கண்டிப்பாக அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் அமலுக்கு வருவதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.