சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி. கிருஷ்ணகுமாரை, மணிப்பூர் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவர் அங்கீகாரம் வழங்க வேண்டும். நீதிபதி கிருஷ்ணகுமார், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். முன்னதாக, அவர் சென்னை நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ளார்.
இவரின் நியமனம், மணிப்பூர் மாநிலத்தில் நீதிமன்ற நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கும் என்பதே எதிர்பார்ப்பு.