கவுகாத்தி: மணிப்பூர் சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் சுர்ஜாகுமார் ஓக்ராம் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பிரைன் சிங் அளித்த பதில் வருமாறு: மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மியான்மர், சீனா, பங்களாதேஷ், நார்வே மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 85 பேர் 5 ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். தற்போது மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறிய 143 பேர் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக மாநில அரசு இதுவரை ரூ.85 லட்சத்துக்கு மேல் செலவிட்டுள்ளது. இவ்வாறு பிரைன் சிங் கூறினார். கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் வகுப்புவாத கலவரம் வெடித்ததில் இருந்து சட்டவிரோத குடியேற்றம் குறித்த பிரச்சினை முக்கியத்துவம் பெற்றது.