புதுடெல்லி: இந்தியா தற்போது உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியா, 2048ல் 2வது பெரிய பொருளாதாரமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 2031ம் ஆண்டுக்குள் இந்தியா இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாற வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் தேபபிரதா பத்ரா மேலும் கூறுகையில், “இந்தியாவின் பொருளாதார பயணம் சிறப்பாக உள்ளது.
இந்தியா தற்போது 3.6 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உள்ளது. 2047-க்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை நோக்கி இந்தியா நகர்கிறது.இந்த இலக்கை அடைய, அடுத்த 10 ஆண்டுகளுக்கு சராசரியாக 9.6 சதவீத வளர்ச்சியை இந்தியா பெற வேண்டும். பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க ரிசர்வ் வங்கி முயற்சித்து வருகிறது.
2024-25 நிதியாண்டில் பணவீக்கம் 4.5 சதவீதமாகவும், 2025-26 நிதியாண்டில் 4.1 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடுகிறோம். பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதே நிலையான வளர்ச்சிக்கு அடித்தளம்,” என்றார்.