எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுவதற்கான உத்திகள் தற்போது இறுதி படியில் இருக்கின்றன. இது வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதற்காக திருப்பதி எழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஆகஸ்ட் 16 ஆம் தேதி புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது. இது SSLV D3 ராக்கெட்டின் மூலம் செய்யப்படவுள்ளது. ஆரம்பத்தில், சிறிய ஏவுகணை வாகனமாகும் SSLV-D3 ராக்கெட்டின் மூலம் EOS-08 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாகக் காரணங்களால், விண்ணில் ஏற்றும் தேதி நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதனால், நாளை (ஆகஸ்ட் 16) EOS-08 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதாக இஸ்ரோ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.