திருவனந்தபுரம்: திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலைக்கு கடந்த மண்டல மற்றும் மகரவிளக்கு காலத்தில் சுமார் 55 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். இது கடந்த ஆண்டை விட 6 லட்சம் அதிகம். இந்த ஆண்டு கோவில் வருமானமும் அதிகரித்துள்ளது.
மண்டல, மகரவிளக்கு காலத்தில் கிடைத்த மொத்த வருமானம் ரூ. 440 கோடி. சபரிமலையில் ரோப்கார் பணிக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்தால் மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் உடனடியாக தொடங்கப்படும். இப்பணியை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்காக 10 பெட்டிகள் ஒதுக்கப்படும். ரோப் கார் பயன்படுத்தினால் டோலி, டிராக்டர் சேவை முற்றிலும் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறிக்கப்பட்ட 2, 4, 6, 8 கிராம் எடையுள்ள தங்க டாலர்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்ததும், சித்திரை விஷு தினத்தில் இருந்து இந்த தங்க டாலர்கள் விற்பனை தொடங்கும்.