புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவரது மனைவி கல்பனா சோரனும் உடனிருந்தார்.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.இந்த சந்திப்பின் போது ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து பேசவில்லை.நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் சோனியா காந்தியை சந்திக்கவில்லை.
மேலும், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சோனியா காந்தியை சந்திக்கவில்லை. அதனால், அவரைச் சந்தித்தேன். ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் குறித்த விவாதம் தொடரும். இந்தியர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சகிப்புத்தன்மை கொண்டவர்கள். முடிந்த வரை பொறுமையாக இருப்பார்கள். அதன் பிறகு வாக்களித்து தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என நம்புகிறேன்,” என்றார். ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் குறித்த விவாதம் தொடரும். இந்தியர்கள் மிகவும் உணர்திறன் மற்றும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள். முடிந்த வரை பொறுமையாக இருப்பார்கள். அதன்பிறகு ஓட்டுப்பதிவு மூலம் கருத்து தெரிவிப்பார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.