கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில், நான்கு வயது சிறுமியின் பிறப்புறுப்பில் வலி இருப்பதாக பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறியதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையின் போது, சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 25,000 அபராதம் விதித்தது.
குற்றவாளி கேரள உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் உடல் ரீதியான உறவு இல்லை என்று வாதிடப்பட்டது.
மேல்முறையீட்டு விசாரணையை முடித்த பின்னர், உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, சிறுமியின் பிறப்புறுப்பைத் தொடுவது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படும் என்று தீர்ப்பளித்தது.