நாளந்தா: பீகாரில் ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனது பிரசாரத்தை இப்போதே தொடங்கியுள்ளது.
![](https://vivegamnews.com/wp-content/uploads/2025/02/28-6.png)
நாளந்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், ‘பீகாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் எங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். பீகாரின் அடுத்த முதல்வராக எனது மகன் தேஜஸ்வி யாதவ் வர வேண்டும். அப்போது தான் அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். என் கட்சிக்காரர்கள் யாருக்கும் தலைவணங்க மாட்டார்கள்.’