பாட்னா: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ராகேஷ் ரஞ்சன் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற்றது.
இதன் முடிவு ஜூன் 4ஆம் தேதி வெளியானது. இந்தத் தேர்வில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். வினாத்தாள் கசிவு, பணியாளர் மாற்றம் என பல முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது.
இதை ஏற்று சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 30க்கும் மேற்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இன்று (ஜூலை 11) முக்கிய குற்றவாளியான ராகேஷ் ரஞ்சன் பாட்னாவில் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே பீகார், ஜார்கண்ட், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளனர்.