புதுடெல்லி: விண்வெளிப் பயணம் மேற்கொண்ட விண்வெளி வீர சுபான்ஷு சுக்லா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்.
சர்வதேச விண்வெளி மையம் சென்று ஆராய்ச்சி பணிகள் மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.
இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், ககன்யான் திட்டம், சுக்லாவின் விண்வெளி பயணம், விண்வெளியில் அவர் மேற்கொண்ட முக்கிய சோதனைகள் குறித்து விவாதித்தாகவும், அவரது சாதனைகளால் தேசம் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பூமிக்கு திரும்பிய சுக்காவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் சுக்லா மத்திய அமைச்சர் ராஜநாத் சிங்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.