கர்நாடகா: நடிகை தமன்னாவுடன் மைசூர் சாண்டல் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு நியமித்ததற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிரபல குளியல் சோப்பான மைசூர் சாண்டலை கர்நாடகா அரசின் கர்நாடக சோப்ஸ் மற்றும் டிட்டர்ஜெண்ட் லிமிடட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக தமன்னாவை 6 கோடியே 20 லட்ச ரூபாய் ஒப்பந்தத்துடன் 2 ஆண்டுகளுக்கு நியமிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இளம் கன்னட நடிகைகளை நியமிக்காமல் ஏன் ஒரு இந்தி நடிகையை விளம்பர தூதராக்க வேண்டும்? எனக்கேட்டு கர்நாடக மாநிலத்தவர்கள் கண்டனம் எழுப்பியுள்ளனர்.