சென்னை: தங்க நகைகளை அடகு வைப்பதற்குப் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைப்பதற்குப் புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி அடகு வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும். நகைகளை அடகு வாங்கும் வங்கி அல்லது வங்கியல்லாத நிறுவனங்கள், தங்கத்திற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.
வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க அனுமதியளித்துள்ள ரிசர்வ் வங்கி, ஒரு கிலோவுக்குக் குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கவும் அனுமதி அளித்துள்ளது. அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும்.
தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயை கடன் வழங்குபவர்கள் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.