புதுடில்லி: இந்தியாவை ோக்கி 400 ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியதாக பெண் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள 36 இடங்களை குறிவைத்து 400 ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியதாக பெண் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களில் பெரும்பாலானவற்றை இந்தியா தகர்த்து விட்டதாக கூறினார்.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறையை சோதிக்கவும், உளவுத் தகவல் சேகரிக்கவுமே ட்ரோன்களை பாகிஸ்தான் அனுப்பியதாகவும் குறிப்பிட்டார்
பொய்த் தகவல் மூலம் உலகை பாகிஸ்தான் ஏமாற்றுகிறது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றஞ்சாட்டியுள்ளார். வழிபாட்டு தலங்களை தாக்கவில்லை என பாக்., பொய் சொல்கிறது என சாடிய அவர், பொய்கள் மூலம் மதவாத பிரச்னையை தூண்டுவதற்கு அது முயல்கிறது என தெரிவித்தார். தவறான தகவல் மூலம் உலகை ஏமாற்றும் கீழான நிலைக்கு பாக்., ராணுவம் சென்றுவிட்டது என்றார்.