புதுடில்லி: மத்திய அரசின் திட்டம்… நாடு முழுவதும் 10 லட்சம் இடங்களில் மழை நீர் சேமிப்பு அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.
நாடு முழுவதும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் 10 லட்சம் இடங்களில் தடுப்பணைகள், கிணறுகள் உள்ளிட்டவற்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
‘ஜல் சஞ்சய் ஜன் பகிதரி’ என்ற திட்டம் கடந்த மாதம் குஜராத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக வெற்றி பெற்றுள்ளதால் நாடு முழுவதும் அடுத்த ஆண்டு பருவமழைக்குள் அதனை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் 5 இடங்களிலும், மாநகராட்சி பகுதிகளில் 10 ஆயிரம் இடங்களிலும் மழை நீர் சேகரிக்கும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.