திஸ்பூர்: அசாமில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ராகுல் பார்வையிட்டார். பின்னர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகள் அபாய கட்டத்தை தாண்டி பாய்கின்றன. இதுவரை 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 08) அசாம் மாநிலம் சென்ற ராகுல், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்தார். அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா? என்று மக்களிடம் ராகுல் கேள்வி எழுப்பினார்.
மணிப்பூர் பயணம்
ஒரு வருடத்திற்கும் மேலாக வன்முறை நடந்து வரும் மணிப்பூர் மாநிலத்திற்கு இன்று (ஜூலை 08) ராகுல் செல்கிறார். மக்களை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்த அவர், மணிப்பூர் கவர்னர் அனுசியாவை சந்திக்க உள்ளார்.