ராஜ்கோட்: மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத்தை தொடர்ந்து, கனமழையால் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்தது. ஒரு கார் டிரைவர் ஒருவர் உயிரிழந்தார்.
அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதேபோல் மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஜபல்பூர் விமான நிலையத்தின் மேற்கூரையில் தண்ணீர் தேங்கியது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேற்கூரை இடிந்து விழுந்தது.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே குஜராத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், ராஜ்கோட் விமான நிலையத்தில் பயணிகள் இறங்கும் பகுதியின் மேற்கூரை தண்ணீரில் மூழ்கியது.
அதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் 3 விமான நிலையங்களின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன.
இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களின் மேற்கூரை வடிவமைப்பையும் ஆய்வு செய்ய விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.