நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் ‘மக்கள் விடுதலை கொரில்லா படையைச் சேர்ந்த தேடப்படும் மாவோயிஸ்ட்டுகள் 12 பேரை கடந்த புதன்கிழமை என்கவுன்ட்டரில் கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்ட கமாண்டோ பிரிவினருக்கு ரூ.51 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அறிவித்தார். இதுகுறித்து மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் ஈடுபட் டுள்ள போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் சரியான நேரத்தில் ரகசிய தகவல் அளித்தார்.
அதன் அடிப்படையில் கமாண்டோக்கள் விரைந்து செயல்பட்டு 12 மாவோயிஸ்ட்டுகளை கொன்றனர். தகவல் அளித்த கிராமவாசி யார் என்பதை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியில் சொல்ல இயலாது. விரைவில் அவருக்கு ரூ.86 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும்’’ என்றார்.