புதுடில்லி: ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் கைது… இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்றதற்காக ஸ்காட்லாந்தை சேர்ந்த மலையேறுபவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிஷிகேஷ் நோக்கிச் சென்ற ஹீதர், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் இருந்து கார்மின் இன்ரீச் ஜிபிஎஸ் ஒன்று மீட்கப்பட்டது. கைது செய்யப்படுவதற்கு முந்தைய தனது இன்ஸ்டாகிராமில் பதிவில், ஹீதர் நடந்ததை விவரித்தார்.
“நான் ஸ்கேனர் வழியாக சோதனைக்கு என் கார்மின் இன்ரீச்சை ட்ரேயில் வைத்தேன், அந்த நேரத்தில் நான் உடனடியாக அதிகாரிகளால் ஓரமாக காத்திருக்க வைக்கப்பட்டேன். என்ன நடக்கிறது என்று யோசித்துக்கொண்டு காத்திருந்தேன். கார்மின்[ஜிபிஎஸ்] இங்கே சட்டவிரோதமானது என்றும் அவர்கள் என்னை காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள் என்றும் எனக்கு இறுதியில் சொல்லப்பட்டது என்று ஹீதர் விவரிக்கிறார். மேலும் தனது நாட்டு தூதரகத்தையும் தொடர்புகொண்டதாக அவர் அதில் தெரிவித்தார்.
\