மும்பை: மும்பையில் காரில் பிஎம்டபிள்யூ கார் மோதி பெண் இறந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசேனா தலைவர் மகன் மிஹிர் ஷாவை போலீசார் கைது செய்தனர். சிவசேனா துணைத் தலைவர் பதவியில் இருந்து ஷாவின் தந்தை ராஜேஷ் ஷாவை நீக்கி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மும்பையைச் சேர்ந்த பிரதீப் நாகாவா மற்றும் காவேரி ஆகியோர் கோலிவாடா என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் மோதியது. பிரதீப் பைக்கில் இருந்து குதித்து தப்பினார். காவேரி மீது கார் மோதியதால் அவர் இறந்தார்.
போலீஸ் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா (24) என்பது தெரியவந்தது. சிவசேனா தலைவரின் மகன் மிஹிர் ஷாவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சிவசேனா கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஷாவின் தந்தை ராஜேஷ் ஷாவை நீக்கி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.