ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்திய ராணுவம் பதிலடி ஆபரேஷன் சிந்தூர்’ எனும் தாக்குதலை நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன மற்றும் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கு பாகிஸ்தான் முயற்சித்தது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலுக்கு தயாரான நிலையில், இந்திய ராணுவம் அதனை முறியடித்தது. பாகிஸ்தான் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபடுகிறது.இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக சக்திகளும் நிலைப்பாடு எடுக்க வேண்டியது அவசியம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது போராக மாறக் கூடாது என்றும், இந்திய மக்களை பாதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.வேலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்த பேரணியில் தாமும் பங்கேற்க இருப்பதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதில் கலந்துகொள்ளும் என்றும் தெரிவித்தார். இந்திய ராணுவம் பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படுகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. இந்திய ராணுவம் உரிய முறையில் பதிலடி கொடுத்துவருகிறது. ஆனால் இது இரு நாடுகளுக்கிடையே நேரடி போராக மாறி விடக்கூடாது என்பது அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.