டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் விதிகளை மாற்றியுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் ஆட்சேபனை சான்றிதழ் தேவையில்லை என்ற நிலை இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி இணைப்புக் குழு அளித்த பரிந்துரைகளுக்குச் செயற்குழு ஒப்புதல் அளித்தது.
சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் விதிகளை மாற்றியுள்ளது. அதன்படி மாநில அரசின் அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளிகளை இனி தொடங்கலாம். விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குவதில் ஆட்சேபனை உள்ளதா என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கேட்கும்.
30 நாட்களுக்குள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றால், மாநில அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கருதப்படும். பின்னர், விண்ணப்பிக்கும் பள்ளிக்கு இணைப்பு வழங்க அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.